ஆஸி ஓபன் அரையிறுதிக்குள் நடால், மெடிஸன்

விறுவிறுப்புக்கு பஞ்ச மில்லாமல் நடைபெற்று வரும் அவுஸ்திரேலிய பகிரங்க டென்னிஸ் தொடரில் தற்போது காலிறுதிப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.


இதில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், ஸ்பெயினின் முன்னணி வீரரான ரபேல் நடால், கனடாவின் டெனிஸ் ஷபோவலோவ்வை எதிர் கொண்டார். பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில், ஸ்பெயினின் ரபேல் நடால், 6-3, 6-4, 4-6, 3-6, 6-3 என்ற செட் கணக்குகளில் வெற்றிபெற்று அரையிறுதிக்குள் நுழைந்தார்.


பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு காலிறுதிப் போட்டியில், அமெரிக்காவின் மெடிஸன் கீசும், செக்குடிய ரசின் பார்போரா கிரெஜி கோவாவும் பலப்பரீட்சை நடத்தினர். விறுவிறுப்பாக நடை பெற்ற இப்போட்டியில், மெடிஸன் கீஸ் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்குகளில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். 

Spread the love