இங்கிலாந்தின் சில பகுதிகளில் வெப்பத்தின் அளவு உயர் நிலைக்கு சென்றதால் சிவப்பு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதுடன் பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக வெப்பம் இருக்குமென பிரித்தானிய வானிலை முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை 40 செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை காணப்படுவதற்கு 50 சதவீதம் வாய்ப்பு உள்ளதாக எதிர்வு கூறப்பட்டுள்ளது. இது இவ்வாறிருக்க இங்கிலாந்தில் கடும் வெப்ப அலை வீசி வருவதன் எதிரொலியாக அங்குள்ள பிரைட்டன் பீச்சில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக் கிழமையன்று மக்கள் கூட்டம் அலை மோதியதுடன் சிவப்பு எச்சரிக்கையை தொடர்ந்து சில பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.