இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டு ஓவர் தாமதமாக பந்து வீசியதாக இங்கிலாந்து அணி வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உலக டெஸ்ட் சாம்பியன் ஷிப்பில் இரண்டு புள்ளிகள் குறைக்கப்பட்டுள்ளது.
நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 2 ஆவது டெஸ்ட் போட்டி லாட்ஸ் மைதானத்தில் தொடங்கியது. பரபரப்பான இந்த போட்டியில் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மெதுவாக பந்து வீசும் ஒவ்வொரு ஓவருக்கும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் விதிகளின்படி, வீரர்களுக்கு அவர்களின் போட்டி கட்டணத்தில் 20 சதவீதம் அபராதம் விதிக்கப்படும் மற்றும் குறிப்பிட்ட நேரத்தில் பந்து வீசத்தவறிய ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளியை அணி இழக்க நேரிடும். இந்த டெஸ்ட் போட்டியில் இரண்டு ஓவர் தாமதமாக பந்து வீசியதாக இங்கிலாந்து அணி வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் இருந்து 40 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.