இடைக்கால அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு ஒரு வாரம் கெடு விதித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியுள்ளது.
ஒரு வார காலத்துக்குள் இடைக்கால அரசை அமைக்காவிட்டால் அரசாங்கத்தில் இருந்து ஸ்ரீலங்கா சுதந்தரக்கட்சியில் 14 பாராளுமன்ற உறுப்பினர்களும் விலகி பாராளுமன்றில் தனித்து செயற்படுவதென தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளர் தயாசிறி ஜெயசேகர தெரிவித்துள்ளார்.