இந்தியாவின் 5 மாநிலங்களில், 16 புதிய விமான நிலையங்கள் விரைவில் நிர்மாணிக்கப்படுமென, விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார். இதுகுறித்துப் பேசிய அவர், மத்தியப் பிரதேசத்திலுள்ள ரேவாவில், புதிய விமான நிலையமொன்று விரைவில் நிர்மாணிக்கப்படுமெனக் குறிப்பிட்டார்.
அதேபோல் சத்தீஸ்கரிலுள்ள, அம்பிகாபூர், பிலாஸ்பூர் மற்றும் ஜக்தால் பூரில் புதிதாக விமான நிலையங்கள் நிர்மாணிக்கப்படுமெனத் தெரிவித்த அவர், உத்தரப் பிரதேச மாநிலத்தில் ஒன்பது விமான நிலையங்களும், மகாராஷ்டிராவில் இரண்டு விமான நிலையமும், ராஜஸ்தானில் ஒரு விமான நிலையமும், புதிதாக நிர்மாணிக்கப்படுமெனத் தெரிவித்தார். கடந்த 70 வருடங்களில், இந்தியாவில், 74 விமான நிலையங்கள் மட்டுமே நிர்மாணிக்கப்பட்டதாகக் கூறிய அமைச்சர் சிந்தியா, கடந்த 7 வருடங்களில், 66 விமான நிலையங்கள் புதிதாகச் செயற்பட ஆரம்பித்ததாகவும் தெரிவித்தார்.