இந்தியா இலங்கைக்கு 500 மில்லியன் டொலரை கடனாக வழங்குகிறது

அவசரமாக தேவைப்படும் உணவு மற்றும் மருந்துப் பொருட்களை இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வதற்கு மேலும் ஒரு பில்லியன் டாலர் கடன் வழங்கும் திட்டம் குறித்தும் இந்திய இலங்கை அரசுகளுக்கிடையே பேச்சுவார்த்தை நடந்து வருவதாக இந்திய இராஜதந்திரி ஒருவர் தெரிவித்ததாக இந்திய என்டிரிவி (NDTV) செய்தி வெளியிட்டுள்ளது.

எரிசக்தி பற்றாக்குறை மற்றும் மின்தடைகளில் இருந்து இலங்கைக்கு தற்காலிக நிவாரணம் கிடைத்துள்ளது . பணப்பற்றாக்குறையில் உள்ள இலங்கைக்கு அவசர எண்ணெய் கொள்முதலுக்காக இந்தியாவிடமிருந்து 500 மில்லியன் டொலர் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது.

நாட்டின் மோசமடைந்துவரும் பொருளாதார நிலைகாரணமாக, அனல் மின்சார நிறுவனங்களால் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியவில்லை. இதனால் நாட்டின் போக்குவரத்துச் சேவைகள் சீர்குலைத்தது. வெளிநாட்டு நாணயமாற்று குறைவடைந்ததால் வர்த்தகர்களால் பொருட்களை இறக்குமதி செய்வது மிகவும் கடினமாகியுள்ளது.

நாட்டின் பாரிய நிலக்கரி மின் உற்பத்தி நிலையத்தின் செயற்பாட்டில் தொடர்ச்சியாக இடையூறுகள் ஏற்படுவதால், தமது நாளாந்த சமையலுக்குத் தேவையான மண்ணெண்ணெய் மற்றும் எரிவாயு ஆகியவற்றை பெற்றுக்கொள்வதில் மக்கள் சிரமங்களை எதிகொள்கின்றனர்.

இரண்டு வார பேச்சு வார்த்தைகளின் பின்னர், இன்று புதன்கிழமை ஒரு முழுமையான ஒப்பந்தம் கையெழுத்திடப்படுகிறது என்று அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர். இது அண்மையில் இந்தியாவிடமிருந்து பெற்றுக்கொண்ட $915 மில்லியன் அந்நியச் செலாவணிக்கு மேலதிகமாக பெற்றுக்கொள்ளப்படும் கடனாகும்.

அவசரமாக தேவைப்படும் உணவு மற்றும் மருந்து போன்றவற்றை இந்தியாவிடமிருந்து இறக்குமதி செய்வதற்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்ளும் முகமாக, மற்றுமொரு 1 பில்லியன் டாலர் கடனைப் பெற்றுக்கொள்ள பேச்சுவார்த்தை நடந்து வருவதாக இந்திய இராஜதந்திரி ஒருவர் கூறினார்.

இந்திய விநியோகஸ்தர்களிடமிருந்து, இலங்கை பெட்ரோலிய பொருட்களை வாங்குவதற்கு 500 மில்லியன் டாலர்கள் பயன்படுத்தப்படும் என்று அந்த அதிகாரி மேலும் கூறினார்.

Spread the love