இந்தியா வேகமாக வளர அரச துறை ஊழியர்களின் ஒத்துழைப்பு அவசியம் பிரதமர் மோடி பேச்சு..!


இந்தியப்பிரதமர் நரேந்திரமோடி உத்திரகண்ட் மாநிலத்தில் நடைபெற்ற ஓர் விழாவில் காணொளி மூலம் தனது பங்களிப்பைச்செய்தபோது அரசதுறைசார் உத்தியோகத்தர்களின் பங்களிப்புப்பற்றி பாராட்டிப்பேசினார்.

உத்திரகண்ட் மாநிலம் முசூரியில் லால் பகதூர் சாஸ்திரி நேஷனல் அகாடமி உள்ளது. இதன் 96வது பொது அறக்கட்டளை விழா இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அறக்கட்டளை நிர்வாகிகள், அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.  காணொலி வாயிலாக பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார்.

அப்போது, கொரோனா பெரும் தொற்று உலகத்தையே முழுமையாக முடக்கியுள்ளது அந்த நிலையிலிருந்து தற்போது தான் நாம் அதிலிருந்து மெல்ல மெல்ல மீண்டுவர தொடங்கி இருப்பதாக தெரிவித்தார். குறிப்பாக இந்தியா மட்டுமன்றி உலக நாடுகள் சகலமும் பொருளாதார பாதிப்பை சந்தித்துள்ளதாகவும், அதில் இருந்து விரைவில் மீண்டுவர வேண்டும் எனவும் கூறினார்.

மேலும், 21ஆம் நூற்றாண்டில் ஒட்டுமொத்த உலகின் பார்வையும் இந்தியா மீதுதான் உள்ளது எனக்கூறிய பிரதமர் மோடி, இந்தியா துரிதமாக தன்னை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார். மேலும், நாடு முழுவதிலும் உள்ள அரசு துறை சார்ந்த ஊழியர்கள் அனைவரும் நாட்டின் முன்னேற்றத்திற்காக அடுத்த 25 ஆண்டுகள் அவர்களின் முழுமையான பங்களிப்பை வழங்க வேண்டும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

Spread the love