இந்திய கடன் வசதியின் கீழ் கடந்த சில நாட்களில் 1,000 மெட்ரிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக அரச வர்த்தக கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்திய கடன் வசதியின் கீழ் சலுகை விலையில் விநியோகிப்பதற்காக இதுவரை சுமார் 80,000 மெட்ரிக்தொன் அரிசி நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக கூட்டுத்தாபனத்தின் தலைவர் யோகா பெரேரா தெரிவித்தார். குறித்த அரிசித்தொகை நாடளாவிய ரீதியிலுள்ள சதொச மற்றும் பல்பொருள் அங்காடிகள் ஊடாக விநியோகிப்பதற்கான நடவடிக்கைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு கிலோகிராம் பொன்னி சம்பா அரிசி 175 ரூபாவிற்கும் ஒரு கிலோ கிராம் நாட்டரிசி மற்றும் வௌ்ளை அரிசி 145 ரூபாவிற்கும் விற்க்கபடவுள்ளதாக யோகா பெரேரா குறிப்பிட்டுள்ளார். இந்திய கடன் வசதியின் கீழ் 300,000 மெட்ரிக்தொன் அரிசி இறக்குமதி செய்யப்படவுள்ளது.