இந்த ஆட்சிக்கெதிராக மக்கள் கிளர்ந்தெளவேண்டும் – சுமந்திரன்

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நாட்டில் பாரிய முன்னேற்றங்கள் செய்வோம் எனக் கூறி அதிகாரத்திற்கு வந்த இந்த அரசாங்கம், அவர்களது ஆட்சியின் குறுகிய காலப்பகுதிக்குள்ளாகவே நாட்டை அதள பாதாளத்துக்குள் தள்ளிவிட்டுவிட்டனர். ஆகவே இந்த ஆட்சி எமக்குதவதேவையற்றது என்பதைத் தெரிவிக்க மக்கள் இந்த ஆட்சிக்கெதிராக கிளர்ந்தெழ வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும், யாழ். மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ, சுமந்திரன் அவர்கள் கூறினார்.

இன்றைய நாளில் நாடு எதிர்கொண்டுள்ள பாரிய நெருக்கடி காரணமாக மக்கள் தமது முக்கிய தேவைகளான எரிபொருள் இன்மை பால்மா இன்மை என்பவற்றுக்கும் முகம் கொடுக்கவேண்டியுள்ளனர். அத்துடன் பாரிய தொடர் மின்வெட்டு நாட்டில் பொருட்களின் விலையேற்றம் என்பன அவர்களது வாழ்வின் ஸ்திரத்தன்மையை கேள்விக்குரியதாக்கி வருகின்றது. எனவே, இந்த மக்களுக்கு நிவாரணம் வழங்குங்கள் என ஹட்டனில் நேற்றைய தினம் (06) நடைபெற்ற போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் அரசங்கத்திற்கு அழைப்பு விடுத்தார்.

இது தொடர்பில் மேலும் பேசும்போது, இந்தக் கோரிக்கைகளை முன்வைத்து அரசுக்கெதிரான எதிர்ப்பு போராட்டத்தில் பங்கெடுக்கவும், பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு எதிராக எம்மால் முன்னெடுக்கப்பட்டுவரும் கையெழுத்து போராட்டத்திற்கு வலுச்சேர்க்கும் முகமாகவே எம் உறவுகளைத்தேடி நாம் மலையகம் வந்துள்ளோம்.

இந்த நாட்டில் ஒருவரும் வாழ முடியாத நிலைமை ஏற்பட்டிருக்கின்றது. எந்த ஒரு  பொருளை வாங்கச்சென்றாலும்கூட ஒரு சாதகமான பதில் தரப்படுவதில்லை.  ´இல்லை´ என்கிற பதிலே அங்கிருந்த  வழங்கப்படுகின்றது. அப்படியே பொருட்கள் உள்ளது என்கிற பதில் வந்தபோதும்கூட விலைகள் மிக மிக உச்சத்திலேயே உள்ளன. நாட்டின் எப்பகுதிக்கும் எங்களால் பிரயாணம் செய்யமுடியாதுள்ளது. அத்துடன் வீட்டிலிருந்து சமைத்து உண்ணுவோம் என்று நினைத்தால் அதுவும் எங்களால் முடியாதுள்ளது. நாட்டை வளப்படுத்துவோம், பாதுகாப்போம் என்றுகூறிக்கொண்டு கூறி ஆட்சிப்படி ஏறியவர்கள் மக்களின் நிலைகண்டு இன்று பாராமுகமாகவே உள்ளனர். மிகக்குறுகிய காலத்துக்குள்ளாகவே  நாட்டை அதாள பாதாளத்துக்குள் தள்ளிவிட்டதோடு மட்டுமின்றி எந்த அபிவிருத்திப்பாதை பற்றியும் சிந்திப்பதாகவும் இல்லை. இதனால்  நாட்டு மக்களும் எழம்ப முடியாமல் அடிவாங்கி விழுந்த வண்ணமேயுள்ளனர்.

இப்படியான ஓர் ஆட்சியும்  ஆட்சியாளர்களும் எமக்குத்தேவையில்லை நாட்டின் உயர்பீடத்தில்  தொடர்ந்தும் அவர்கள்  இருக்கத்தேவையும் இல்லை. ஆகவே எம்  மக்கள் கிளர்ந்தெழ வேண்டும். இவ்வேளை மக்களின் கிளர்ச்சியை அடக்க ஆட்சியாளர்களின் ஆயுதம் பயங்கரவாதத்தடைச்சட்டமே  மக்களை ஒடுக்குவதற்கு ஆட்சியாளர்கள் பயங்கரவாத தடைச்சட்டத்தையே பயன்படுத்துவார்கள். அதனால்தான் இப்படியான பயங்கர சட்டத்தை நீக்குமாறு வலியுறுத்தி கையெழுத்து வேட்டையில் இறங்கியுள்ளோம்” என்றார்  பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம.ஏ. சுமந்திரன் அவர்கள்.

Spread the love