“இனி நியூயோர்க்கில் இடமில்லை”

புலம்பெயர்ந்து வருவோருக்கு “இனி நியூயோர்க்கில் இடமில்லை” என நியூயோர்க்கின் நகர மேயர் அறிவித்துள்ளார். நியூயோர்க்கில் புலம்பெயர்ந்தோரினால் ஏற்படும் நெருக்கடிகள் தொடர்பில் நியூயார்க்கின் நகர மேயர் விமர்சித்துள்ளார். அத்துடன் புலம் பெயர்ந்து வருவோர்களுக்கு வழங்கப்படும் அதிக சலுகைகள் தொடர்பில் அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும் அவர் விமர்சித்துள்ளார்.

நியூயோர்க்கிற்குள் குடியேறுபவர்களின் வருகையால் நகரத்திற்கு $2 பில்லியன் வரை செலவாகும் என்றும் அவர் கூறியுள்ளார். எனவே புலம்பெயர்ந்து வருவோர் மத்திய அரசு இந்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

நியூயார்க்கு நகரம் ஐக்கிய அமெரிக்காவில் மிகக்கூடுதலான மக்கள் தொகையுடைய நகரமாகும். இங்கு உலகெங்குமிருந்து குடிபெயர்ந்த மக்கள் வாழ்வதால் இந்த நகரத்தின் தாக்கம் வணிகம், நிதி, பண்பாடு, பொழுதுபோக்கு போன்ற துறைகளில் உலகளாவிய அளவில் கூடுதலாக விலங்குகின்ரமை குறிப்பிடத்தக்கது.

Spread the love