நாட்டில் உட்புற மற்றும் வெளிப்புற இடங்களுக்கு பயணிப்பதற்கு முகக்கவசம் அணிவது கட்டாயமில்லையென சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார். சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விதிமுறைகள் இன்று 10 ஆம் திகதி முதல் அமுலுக்கு வருகின்றன.
எனினும் சுவாசக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்கள் முகக்கவசம் அணிவதற்கு ஊக்குவிக்கப்படுவதாகவும் அத்துடன் முகக்கவசம் அணிய விரும்புபவர்கள் எவ்வித தடையும் இன்றி அணிந்து கொள்ள முடியுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் 19 பி.சி.ஆர். பரிசோதனை மற்றும் ரெபிட் அன்டிஜென் பரிசோதனையை ஸ்கிரீனிங் சோதனையாக செய்வது நிறுத்தப்படும் என்றும் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. நாட்டில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் நடைமுறை நீக்கப்பட்ட போதிலும் சமூகப் பொறுப்புடன் இருக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது