நாட்டில் இன்று கணிசமான எண்ணிக்கையிலான பேருந்துகள் சேவையில் ஈடுபடவுள்ளதாக இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
6,000 – 7,000 பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, மறுசீரமைக்கப்பட்ட கட்டணங்களை விட பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறதா என்பதை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அதற்காக நடமாடும் பரிசோதகர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி நிலான் மிராண்டா தெரிவித்தார்.