நாளை(08) முன்னெடுப்படவுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய செயற்குழு இன்று(07) பகல் ஒன்றுகூடவுள்ளது.
நீர், மின்சாரம், பெட்ரோல் மற்றும் துறைமுக தொழிற்சங்கங்களின் ஒன்றியங்கள் இணைந்து நாளை(08) தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு தீர்மானித்துள்ள நிலையில் இன்று(07) மத்திய செயற்குழு ஒன்றுகூடுகின்றது.
ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிகமான மாதாந்த சம்பளம், ஏனைய கொடுப்பனவுகள் மற்றும் நாணயமற்ற கொடுப்பனவுகளை பெறுபவர்களிடமிருந்து 6 வீதம் முதல் 36 வீதம் வரை வருமான வரி அறவிடுவதற்கான அரசாங்கத்தின் தீர்மானத்தை இடைநிறுத்துமாறு கோரி இந்த தொழிற்சங்க நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது.