இன்று(16) முதல் எதிர்வரும் 19ஆம் திகதி வரை, தினமும் 03 மணித்தியாலங்களுக்கு மின்வெட்டை அமுல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்திலுள்ள முதலாவது பிறப்பாக்கி செயலிழந்தமையால், நாளாந்த மின்வெட்டு காலத்தை அதிகரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதற்கமைய, A முதல் L வரையான வலயங்களில் மற்றும் P முதல் W வரையான வலயங்களில் பகல் வேளையில் ஒரு மணித்தியாலம் 40 நிமிடங்கள் மற்றும் இரவு வேளையில் ஒரு மணித்தியாலம் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு வர்த்தக வலயத்திற்குட்பட்ட பகுதிகளில் காலை 6.30 முதல் 8.30 வரையான காலப்பகுதியில் இரண்டரை மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதனிடையே, M,N,O,X,Y மற்றும் Z ஆகிய வலயங்களில் அதிகாலை 5.30 மணி முதல் காலை 8.30 மணி வரையான காலப்பகுதிக்குள் 03 மணித்தியாலங்கள் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.