இராணுவ ஆட்சிக்கு எதிராகப் போராடிய பொதுமக்கள் மீது துப்பாக்கிச் சூடு

சூடானில் இராணுவ ஆட்சிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீது, இராணுவத்தினர் சரமாரியாக சுட்டதில், 7 பேர் பலியானதுடன், மேலும் பலர் காயமடைந்தனர்.


சூடானில் இராணுவ ஆட்சிக்கு எதிராக, தொடர்ச்சியாக மக்கள் எதிர்ப்புப் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்தநிலையில், நேற்று முன்தினம் திங்கட் கிழமை தலைநகர் கார்டூமில், பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டு, பேரணியாகச் சென்ற போது, அவர்களை நோக்கி, இராணுவத்தினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தநிலையில், ஆர்ப்பாட்டக்காரர்கள் வன்முறையைக் கையில் எடுத்துள்ளதாக இராணுவம் குற்றம் சாட்டியுள்ளது. எனினும், ஜனநாயக எதிர்ப்பு போராட்டக்காரர்கள், இராணுவத்தின் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.

அமைதியான எதிர்ப்பாளர்களுக்கு எதிராக, பாதுகாப்புப் படைகள் அதிக பலத்தினைப் பயன்படுத்துவதாக, அவர்கள் கண்டித்துள்ளனர். இதற்கிடையில், திங்கட்கிழமை நடந்த கொடிய வன்முறைக்கு மத்தியில், சூடானில் உள்ள அனைத்துக் கட்சிகளும், இறுக்கமான கட்டுப் பாட்டினைக் கடைப்பிடிக்க வேண்டுமென, ஐ.நா. பாதுகாப்புச் சபையின் 9 உறுப்பு நாடுகள் இணைந்து கூட்டாக வலியுறுத்தியுள்ளன. 2021, ஒக்டோபர் 25ஆம் திகதி, சூடானில் நடந்த இராணுவப் சதிப்புரட்சி குறித்து, தங்களின் தீவிர கவலையைத் தாங்கள் தெரிவிப்பதாக, இங்கிலாந்து, மெக்சிகோ, அல்பேனியா, பிரேசில், காபோன், கானா, அயர்லாந்து மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் இணைந்து வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. 

Spread the love