இருபது 20 தொடருக்கான புதிய தரவரிசைப் பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. இதில் பட்ஸ் மேன்கள் தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் முன்னாள் கப்டன் விராட் கோலி வரலாறு காணாத அளவு சரிவைக் கண்டுள்ளார்.
டாப்-10 இடத்தில் ஆதிக்கம் செலுத்தும் விராட் கோலி இம்முறை டாப் 10 இல் இருந்து வெளியேறியுள்ளது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பட்ஸ்மேன்கள் தரவரிசைப் பட்டியலில் இங்கிலாந்து அணியின் டேவிட் மலான் முதலிடத்திலும், தென் ஆபிரிக்க அணியின் மார்க்ரம் 2 ஆவது இடத்திலும், பாகிஸ்தான் அணி கப்டன் பாபர் அசாம் 3 ஆவது இடத்திலும் உள்ளனர். பாகிஸ்தானின் முகமது ரிஸ்வான் 4 ஆவது இடத்திலும், இந்தியாவின் கே.எல். ராகுல் 5 ஆவது இடத்திலும் உள்ளனர்.
முன்னாள் கப்டன் விராட் கோலி 657 புள்ளிகளுடன் தரவரிசைப் பட்டியலில் 11 ஆவது இடத்திற்கு சரிவடைந்துள்ளார். ரோகித் சர்மா 13ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.