சர்வதேச நாணய நிதியத்துடனான (IMF) பேச்சுவார்த்தை இம்மாத இறுதிக்குள் இறுதிக்கட்டத்தை எட்டும் என எதிர்பார்ப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.
அரசாங்கம் இந்த ஆண்டு 5 பில்லியன் அமெரிக்க டொலர்களை திருப்பிச் செலுத்துவதை இலக்காகக் கொண்டுள்ளதாக ஒன்றிணைந்த வர்த்தக சபைகள், மருந்து உற்பத்தியாளர்கள் சங்கம், சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளின் சங்கம் உள்ளிட்ட தொழிற்சங்க பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது பிரதமர் தெரிவித்தார்.
நாட்டின் கையிருப்பை அதிகரிக்க மேலும் 1 பில்லியன் அமெரிக்க டொலர்கள் தேவைப்படுவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார். நிதி மற்றும் சட்ட ஆலோசகர்களை நியமித்ததன் பின்னர் கடன் மறுசீரமைப்பு தொடங்கியுள்ளதாக தெரிவித்த பிரதமர், நெருக்கடியைத் தணிக்க உதவும் எந்தவொரு நிதித் திட்டமும் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்படிக்கையை பொறுத்தே அமையும் என சுட்டிக்காட்டியுள்ளார்.