இலங்கைக்கு எதிரான முதலாவது ஒரு நாள் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 60 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவர்கள் நிறையில் 8 விக்கெட் இழப்பிற்கு 294 ஓட்டங்களைப் பெற்றது.
295 ஓட்டங்களை வெற்றியிலக்காக நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 38 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 234 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது.