ஹங்கேரியின் வட்டியில்லா கடன் மூலம் கொஹூவல மற்றும் கெட்டம்பே பிரதேசங்களில் இரண்டு மேம்பாலங்களை நிர்மாணிப்பதற்க்காக ஹங்கேரியின் Exim வங்கியினால் 52 மில்லியன் யூரோ வட்டியில்லா கடன் வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடனை மீள செலுத்த 18 வருடங்கள் வழங்கப்பட்டுள்ளதுடன், 3 வருட சலுகைக் காலமும் வழங்கப்பட்டுள்ளதாக ஹங்கேரிய வர்த்தக மற்றும் வௌிவிவகார அமைச்சர் Péter Szijjártó தெரிவித்தார்.
நேற்று அதிகாலை இலங்கை வந்தடைந்த ஹங்கேரிய வௌிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சரை இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய உள்ளிட்டவர்கள் விமான நிலையத்தில் வரவேற்றதுடன் பின்னர் கொழும்பில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் அவர் கலந்து கொண்டிருந்தார்.
இதனையடுத்து, கொஹூவலயில் அமைக்கப்படவுள்ள மேம்பாலத்தின் நிர்மாண பணிகளும் ஆரம்பித்து வைக்கப்பட்டன.