இலங்கை அரசாங்கம் மேற்கொண்டுள்ள நிதித்துறை சீர்திருத்தங்களை வரவேற்றுள்ளபோதிலும், IMF அனைத்து முன் நடவடிக்கைகளையும் நிறைவு செய்ய வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள்ளது.
இந்தநிலையில் இந்த நடவடிக்கைகள், கடினமாக இருக்கும் என்றபோதிலும் நிதியுதவியைப் பெற்றுக்கொள்ள இதுவே மார்க்கமாகும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரான கிருஷ்ணமூர்த்தி சுப்ரமணியனுடன் தாம் நேற்று நடத்திய சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்ட ஷெஹான் சேமசிங்க, நிதித்துறையில் மேலும் சீர்திருத்தங்களை வழங்குவதற்காக புதிய சட்டங்களை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்பதை தாம் அவருக்கு தெளிவுப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார். அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை சீர்திருத்த எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்தும் அவரிடம் தெரிவிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.