நல்லெண்ண விஜயம் ஒன்றை மேற்கொண்டு (19) இலங்கைக்கு வருகை தந்திருந்த பங்களாதேஷ் கடற்படைத் தளபதி அத்மிரல் எம். ஷஹீன் இக்பால், மரியாதை நிமித்தமாக பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியுமான ஜெனரல் ஷவேந்திர சில்வாவை இராணுவ தலைமையகத்தில் சந்தித்தார். இராணுவ தளபதியின் அலுவலகத்தில் நடைபெற்ற இச் சந்திப்பின் போது, தற்போதைய கடலிசார் பிரச்சினைகள், இரு நாடுகளுக்கும் பொதுவான விடயங் கள், உலக அளவிலான மாற்றங்கள், கடற்படையின் செயற்பாடுகள் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கருத்துகளை பரிமாறிக்கொண்டனர்.
2022-01-21