சர்வதேச நாணய நிதியம் இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார அபிவிருத்திகளை “மிக நெருக்கமாக” அவதானித்து வருவதாகக் கூறியுள்ளது.
சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைப் பணித்தலைவர் மசாஹிரோ நோசாகி தற்போதைய தேசிய நெருக்கடி குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். பல தசாப்தங்களில் மோசமான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் இலங்கையில் பொது அமைதியின்மை அதிகரித்து வருவதால், இலங்கையின் அரசியல் மற்றும் பொருளாதார முன்னேற்றங்களை சர்வதேச நாணய நிதியம் மிக நெருக்கமாக கண்காணித்து வருவதாக நோசாக்கி அந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த மாத இறுதியில் வொஷிங்டனுக்கு புதிதாக நியமிக்கப்பட்ட நிதியமைச்சரின் வருகை உட்பட அதிகாரிகளுடன் கலந்துரையாடல்களை சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஆனால் புதிதாக நியமிக்கப்பட்ட நிதியமைச்சர் அலி சப்ரி தனது பதவியில் இருந்து விலகியமையானது சர்வதேச நாணய நிதியத்துடனான பேச்சுக்களை கேள்விக்கு உள்ளாக்கியுள்ளது என்று அந்த அறிக்கையில் நோசாகி மேலும் குறிப்பிட்டுள்ளார்.