இலங்கையின் நிதி நெருக்கடியை தீர்ப்பதற்கு ஒத்துழைப்பு வழங்கப்படும் என்று இந்தியா அறிவித்துள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் சுப்பிரமணியம் ஜெய்சங்கர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நேற்று புதன்கிழமை இடம்பெற்ற இணைய வழிகலந்துரையாடல் ஒன்றின் போதே இந்திய வெளிவிவகார அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையில் காணப்படும் நிதி நெருக்கடியை குறைக்க இந்தியா மற்றும் இலங்கை இடையே பல கட்டப் பேச்சுவார்த்தைகள் நடந்ததாக அமைச்சர் ஜெய்சங்கர் கூறினார்.
குறிப்பாக அந்நியச் செலாவணியை பேணுவதற்கும் எரிபொருள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கும் இந்தியா கடன் உதவியை வழங்கியுள்ளது. இருப்பினும் கடுமையான அந்நியச் செலாவணி தட்டுப்பாடு காரணமாக, இலங்கைக்கு எரிபொருள் இறக்குமதி செய்ய பணம் இன்மை காரணமாக மின்சாரம் துண்டிக் கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.