இலங்கையில் தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வரும் நிலையில், மற்றுமொரு மக்கள் பிரதமர் மஹிந்த பதவி விலகுவாரா? விலக மாட்டாரா? என்ற செய்திகளே அதிகம் பேசப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் பௌத்த மகாநாயக்க தேரர்களின் அறுவுறுத்தலுக்கு அமைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ (Mahinda Rajapaksa) பதவி விலகினாலும், புதிய அரசாங்கத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தரப்பில் பிரதமர் ஒருவர் நியமிக்கப்படமாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ (Basil Rajapaksa) தெரிவித்துள்ளார்.