இலங்கையில் அறிமுகமாகும் புதிய சட்ட விதிகள் மற்றும் சட்டங்கள்!

புதிய சட்ட விதிகள் பலவற்றை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று(புதன்கிழமை) ஆற்றிய அரசாங்கத்தின் கொள்கை பிரகடன உரையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது தொடர்ந்தும் உரையாற்றிய அவர், ‘புதிய சட்ட விதிகள் மற்றும் சட்டங்கள் பலவற்றை அறிமுகப்படுத்துவதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்

பெண்கள் தொடர்பான தேசிய ஆணைக்குழுச் சட்டம்

ஆண் பெண் பாலின சமத்துவ சட்டம்

பெண்களை வலுவூட்டும் சட்டம்

சிறுவர் பாதுகாப்பு சட்டம்

இளைஞர் நாடாளுமன்ற மறுசீரமைப்புச் சட்டம்

போதைப்பொருள் தடுப்பு கட்டளையிடும் தலைமையக சட்டம்

உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு

பயங்கரவாத தடுப்பு மற்றும் தேசிய பாதுகாப்புச் சட்டம்

தற்போது நடைமுறைப்படுத்தப்படும் பிரசித்த நாட்டிய கட்டுப்பாட்டுச் சட்டம் இல்லாதொழிக்கப்படும். அரசியலமைப்பில் உள்ள கருத்து தெரிவிக்கும் உரிமையினை அடிப்படையாகக் கொண்டு கலைப் படைப்புக்களை வகைப்படுத்தும் சட்டம் தயாரிக்கப்படும்.

எமது நாடு காலநிலை மாற்றங்களுக்கு உட்படும் வலயத்தில் அமைந்துள்ளது. ஆகவே தான் நாம் காலநிலை மாற்றங்கள் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும். அது தொடர்பில் உரிய முறையில் நடவடிக்கை மேற்கொண்டால் எமக்கு பசுமை ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு காணப்படுகிறது. அவை அனைத்தையும் கவனத்திற் கொண்டு நாம் இந்த சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்போம்.

காலநலை மாற்றச் சட்டம்

சமூக நீதிக்காக ஆணைக்குழுச் சட்டம்

மீள் காடு வளர்ப்பு மற்றும் தாவர பாதுகாப்புச் சட்டம்

உயிரோட்ட முறைமை சட்டம் – மகாவலி கங்கை, சிங்கராஜ வனம், சிவனொலிபாத பிரதேசம் மற்றும், வனச் சிகரம், ஹோட்டன் சமவெளி, நக்கில்ஸ், ஆதமின் பாலம் ஆகியன இச்சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படும்.

கடல் வள ஆராய்ச்சி மற்றும் முகாமைத்துவ சட்டம்.

முத்துராஜவெல பாதுகாப்புச் சட்டம்.

பொருளாதாரம் தொடர்பாகவும் புதிய சட்டங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

அரச செலவு முகாமைத்துவத்துக்காக ஸீரோ பட்ஜட் அல்லது பூச்சியத்தை அடிப்படையாக கொண்ட வரவு செலவுச் செயன்முறை ஒன்று அறிமுகப்படுத்தப்படும்.

வருமான அதிகாரச் சட்டம்

வெளிநாட்டு கடன் முகாமைத்துவச் சட்டம்

உணவுப் பாதுகாப்புச் சட்டம்

அரச சொத்து முகாமைத்துவச் சட்டம்

பொருளாதார ஸ்திரத்தன்மை சட்டம்

தேசிய ஓய்வூதிய பங்களிப்புச் சட்டம்

புதிய மதுவரிச் சட்டம்

அந்நிய செலாவணிச் சட்ட திருத்தம்

புன்வத் சட்டம்

வெளிநாட்டு வியாபார மற்றும் முதலீட்டு சட்டம்

டிஜிட்டல் தொழில்நுட்ப சட்டம்

கறுவா அபிவிருத்தி திணைக்களச் சட்டம்

பரஸ்பர இணக்கப்பாட்டின் கீழான விவாகரத்துச் சட்டம்

இவ்வாறான பொருளாதார சமூக மற்றும் அரசியல் மறுசீரமைப்புக்களை வெற்றியடையச் செய்ய வேண்டுமாயின் சரியான விடையங்களின் அடிப்படையில் மக்களுக்கு அறிவூட்டுதல் ஓர் அத்தியாவசியமான விடயமாக காணப்படுகிறது. “ எனத் தெரிவித்துள்ளார்.

Spread the love