கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களில் காற்றின் தரம் இன்று மீண்டும் குறைந்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிக்கின்றன.
அதன்படி, இன்றைய நிலவரப்படி, கொழும்பு மற்றும் கம்பஹா காற்றின் தரக் குறியீடு (AQI) 150க்கு மேல் உள்ளது. இப் பகுதிகளில் வசிப்பவர்கள் உடல்நல பாதிப்புகளை சந்திக்க நேரிடும் அதேவேளையில் குழந்தைகள் மற்றும் வயதானவர்கள் கடுமையான உடல்நல பாதிப்புகளை சந்திக்க நேரிடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், யாழ்ப்பாணம், புத்தளம், பதுளை மற்றும் பொலனறுவை மாவட்டங்களில் வார இறுதியில் குறைந்த காற்றின் தரம் மேம்பட்டுள்ளதாக NBRO தெரிவித்துள்ளது.
காற்றுடன் இந்தியாவில் இருந்து வெளியேறும் மாசுபட்ட காற்றின் விளைவாக இலங்கையின் காற்றின் தரம் குறைந்துள்ளது என்பது ஏற்கனவே உறுதி செய்யப்பட்டது. கடந்த சில நாட்களாக குறிப்பாக மழை பெய்து வருவதால் காற்றின் தரம் வானிலையுடன் ஏற்ற இறக்கமாக உள்ளது