இலங்கைக்கு சுற்றுலா மேற்கொள்ளும் சர்வதேச பயணிகளிடம் கொரோனா பரிசோதனைக்கான அறிக்கையை கட்டாயப்படுத்தி விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்குமாறு ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க கோரிக்கை விடுத்துள்ளார். சுற்றுலா மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளில் இலங்கை வேறு நாடுகளுடன் போட்டியிட முடியாது.
ஆகையினால் எமது நாட்டிற்கு அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்ள நாங்கள் நெகிழ்வு போக்கினை கடைப்பிடிக்க வேண்டும். 12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் 72 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனைக்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும், அல்லது 48 மணித்தியாலத்திற்குள் மேற்கொள்ளப்பட்ட RAT பரிசோனை அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என சுகாதார அமைச்சு கட்டுப்பாடுகளை விதித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.