இலங்கையில் தமிழ் மக்களின் 35000 கண்கள் பிடிங்கி எடுக்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்ட விவகாரம் தற்போது இலங்கையில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. தமிழ் மக்களின் கண்கள் சீனா,பாகிஸ்தான்,ஜப்பான் போன்ற நாடுகளுக்கு தானம் செய்யப்பட்டதாக தகவல்கள் தற்போது வெளியாகிய வண்ணம் உள்ளது.
அதாவது, இலங்கையில் புரட்சிகள் ஏற்பட்ட காலத்தில் வெள்ளை வானில் கடத்தப்பட்ட தமிழ் இளைஞர்களின் கண்கள் இலங்கை அரசால் பலவந்தமாக பிடுங்கப்பட்டு வெளிநாடுகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை அரசாங்கத்தினால் பாகிஸ்தான் வைத்தியசாலைகளுக்கு 35 ஆயிரம் கண்கள் தானமாக வழங்கப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் வைத்தியர் ஒருவர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
பாகிஸ்தானில் இலங்கையர் ஒருவர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் தனது வருத்தத்தினை பகிர்ந்துக்கொள்ளும் போதே இவ்வாறு தெரிவித்திருந்தார். இலங்கை 83200 விழி வெண்படலங்களை உலகின் பல நாடுகளிற்கு தானம் செய்துள்ளது. இவற்றில் பெருமளவானவற்றை பாகிஸ்தானே பெற்றுக்கொண்டுள்ளது. 1967 முதல் கண்தான சங்கம் பாகிஸ்தானிற்கு 35000 விழிவெண்படலங்களை தானம் செய்துள்ளது. இலங்கை எங்களிற்கு கண்களை தானம் செய்தது நாங்கள் பார்வையை இழந்துவிட்டோம் என்றும் அவர் தெரிவித்திருந்தார். இந்நிலையில், அவ்வாறு கண்கள் தானம் செய்யப்பட்டிருந்தால் அவைகள் யாருடயவை என்ற தகவல்கள் வெளியிடப்பட வேண்டும் என தமிழ் மக்கள் கோரிக்கைகளையும் முன்வைத்து பல போராட்டங்களிலும் ஈடுபட்டுள்ளனர்.