இலங்கை அதிகாரிகளுடன் கலந்துரையாடல்கள் தொடர்வதால், சர்வதேச நாணய நிதியத்தின் பணியானது இன்னும் ஒரு நாளுக்கு நீடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் இலங்கைக்கான சிரேஷ்ட தூதுவர் பீட்டர் ப்ரூயர் மற்றும் இலங்கைக்கான பிரதானி மசாஹிரோ நோசாகி ஆகியோர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அவர்கள் இதனை தெரிவித்துள்ளனர். இலங்கை மற்றும் சர்வதேச நாணய நிதியம் (IMF) நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு அவசரகால கடன் வழங்குவதற்கான ஆரம்ப, பணியாளர் மட்ட உடன்பாட்டை எட்டியுள்ளதாக ரொய்ட்டர்ஸ் இன்று செய்தி வெளியிட்டுள்ளது. .