இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான முதல் 20/20 போட்டி இன்று (11/02) சிட்னியில் நடைபெற்றது. இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தெரிவு செய்தது.
முதலில் துடுப்பாடிய அவுஸ்திரேலியா அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 149 ஓட்டங்களை பெற்றது. இதில் பென் மக்டேர்மொட் 53 ஓட்டங்களையும், மார்கஸ் ஸ்டொய்னிஸ் 30 ஓட்டங்களையும் பெற்றனர். பந்துவீச்சில் வனிது ஹசரங்க 3 விக்கெட்களையும், பினுர பெர்னாண்டோ, சமிக்க கருணாரட்ண, துஷ்மந்த சமீர ஆகியோர் தலா இரண்டு விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
இலங்கை அணியின் துடுப்பாட்டத்தின் போது மழை பெய்தமையினால், 19 ஓவர்களில் 143 என்ற வெற்றி இலக்கு இலங்கை அணிக்கு வழங்கப்பட்டது. பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 19 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 122 ஓட்டங்களை பெற்றது. இதில் பத்தும் நிசங்க 36 ஓட்டங்களை பெற்றார். பந்துவீச்சில் ஜோஷ் ஹாஸெல்வூட் 4 விக்கெட்களையும், அடம் சம்பா 3 விக்கெட்களையும் கைப்பற்றினார்கள்.
அவுஸ்திரேலியா அணி டக் வேர்த் லூயிஸ் முறையில் 20 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
இந்த போட்டியின் நாயகனாக அடம் சம்பா தெரிவு செய்யப்பட்டார்.
இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான இரண்டாவது 20/20 போட்டி நாளை மறுதினம் (13/02/) மதியம் 1:40 இற்கு நடைபெறும்.