இலங்கை அணியின் மற்றுமொரு வீரருக்கு கொரோனா தொற்று

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் பெத்தும் நிஸ்ஸங்கவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதாக இலங்கை கிரிக்கெட் நிறுவனம் (எஸ்.எல்.சி) தெரிவித்துள்ளது. இது குறித்து இலங்கை கிரிக்கெட் நிறுவனம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பெத்தும் நிஸ்ஸங்கவிற்கு உடல் நிலை சரியில்லாமல் இருப்பதாக தெரிவிக்கப்பட்டமையடுத்து. நேற்று முன்தினம் காலை அவருக்கு மேற் கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையின் போது அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது.

இதையடுத்து நேற்று முன்தினம் பிற்பகலில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனை முடிவில் கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான பெத்தும் நிஸ்ஸங்கா உடனடியாக தனிமைப்படுத்தப்பட்டார்.  இந்நிலையில், பெத்தும் நிஸ்ஸங்கவுக்கு மாற்று வீரராக ஓஷத பெர்னாண்டோ இணைத்துக் கொள்ளப்படுவாரென கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவுஸ்ரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர் இடம்பெற்று வரும் நிலையில், இதுவரை இலங்கையின் 6 வீரர்கள் கொவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். ஜெப்ரி வெண்டர்சே, அசித்த பெர்னாண்டோ , தனஞ்சய டி சில்வா , பிரவீன் ஜெயவிக்ரம, ஏஞ்சலோ மெத்யூஸ் ஆகியோர் ஏற்கனவே கொவிட் தொற்றுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Spread the love