பாலுக்கும் காவல் பூனைக்கும் தோழன் என்ற பழமொழி அறியப்படிருக்கும் ஆனால் நேரில் பாத்திருக்க சிலருக்கு வாய்ப்பிருக்காது. இந்த பழமொழியை மெய்ப்பித்தனர் எமது அதிகாரிகள் சிலர்.
நாளைய தினம் யாழ்ப்பாணம் வரும் சீனாவின் தூதுவர் உள்ளிட்ட குழுவினரின் பயண ஏற்பாடுகள் முதல் இரவு விருந்து வரையில் மிகவும் இரகசியமாகத் திட்டமிட்டவர் வடக்கு மாகாண ஆளுநர். இருந்தபோதும் ஒரு அச்சுப் பிசகாமல் முதலாவது நிகழ்ச்சி நிரலின் பிரதியை இந்தியத் தூதருக்கு அனுப்பி வைத்ததே மாகாண ஆளுநர்தான் என்பது பின்னர் தெரியவந்தது. இந்த நிலமையில் இரவு விருந்திற்கு அழைக்கப்பட்ட சிலரில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசணும் உள்ளடக்கம். அவரும் தனது பங்கு விசுவாசத்திற்கு இந்த விடயத்தை தூதரகத்தின் காதில் போட்டுவைத்தார்.
இவர்களின் பணி முடிந்த நிலையில் தூதுவர் யாழ்ப்பாணம் மாநகர முதல்வரையும் தூதுவர் பிரதான நூலகத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யப்பட்டதனால் சீனாவின் தூதுவர் நூலகத்திற்கு வருகின்றார். மன்னித்துக்கொள்ளுங்கள் ஆளுநர்தான் ஏற்பாடு என மாநகர முதல்வரும் தனது பங்கிற்கு இந்தியத் தூதரகத்திடம் ஒப்புவித்தார். ஆகா என்னவொரு விசுவாசம் என மெய் சிலிர்க்கின்றனர்.