வெள்ளவத்தை கடலில் இன்று காலை முதலை ஒன்று அவதானிக்கப்பட்டுள்ளது. அண்மைய நாட்களாக இலங்கையின் கடற்பரப்புக்களில் முதலைகள் அவதானிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் முதலைகளை பிடிப்பதற்கான தீவிர நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அண்மையில், தெஹிவளை – புகையிரத நிலையத்திற்கு பின்புறம் உள்ள கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்த ஒருவர் முதலை தாக்கி உயிரிழந்திருந்தார். அதனைத் தொடர்ந்து காலி முகத்திடலைச் சுற்றியுள்ள கடற்பரப்பிலும் முதலை அவதானிக்கப்பட்டதுடன், முதலைகளைப் பிடிக்க வனஜீவராசிகள் திணைக்களத்தினர் தீவிர நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதுடன் அவதானமாக செயற்படுமாறு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.