எதிர் வரும் மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவிருக்கும் ஐ.நா மனித உரிமைகள் பேரவை மாநாட்டில், இலங்கைக்கு எதிராக கொண்டுவரப்படும் என எதிர்பார்க்கப்படும் தீர்மானங்களுக்கு எதிராக இலங்கைக்கு இந்தியாவின் ஆதரவைப் பெற்றுக்கொள்வதற்கு அரசாங்கம் பாரிய முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், இலங்கை மீதான இந்தியாவின் பிடியை அதிரிக்கும் நடவடிக்கைகள் பல்வேறு முனைகளிலும் தீவிரமடைந்துள்ளன.
இலங்கையின் எரிபொருள் விநியோகச் சங்கிலியை நேரடியாக தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர ஏற்கனவே முன்னெடுத்த செயற்பாட்டிற்கு மேலதிகமாக, இலங்கையின் பேருந்தோட்ட நிறுவனங்களை கையகப்படுத்தும் பாரிய திட்டத்தையும் இந்தியா முன்னெடுத்துள்ளதாக அறியவருகிறது.
இந்தப் பின்னணியில், இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் பீரிஸ் நாளை (6ம் தேதி) இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். அவர் அங்கு தங்கியிருக்கும் நாட்களில் இந்திய இராஜதந்திரிகளுடனான பேச்சுவார்த்தையின் இறுதி முடிவுகள் இலங்கைக்கு மேலும் அழுத்தத்தை ஏற்படுத்தும் என அரசியல் அவதானிகள் கருதுகின்றனர்.