இலங்கை ரூபா பாரிய வீழ்ச்சி

சர்வதேச நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபா பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளன. நாட்டிலுள்ள தனியார் வங்கிகளின் நேற்றைய நாணய மாற்று வீதங்களுக்கு அமைய இந்தத் தகவல் வெளியாகி உள்ளது.

அதற்கமைய டொலர் ஒன்றின் விற்பனை விலை 260 ரூபாவாகவும் கொள்வனவு விலை 248.34 ரூபாவாகவும் பதிவு செய்துள்ளது. ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 344.72 ரூபாவாகும் கொள்வனவு விலை 325.48 ரூபாவாகும். யூரோ ஒன்றின் விற்பனை விலை 289.93 ரூபாவாகும் கொள்வனவு விலை 272.47 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது. சுவிஸ் பிராங் ஒன்றின் விற்பனை விலை 283.26 ரூபாவாகவும் கொள்வனவு விலை 260.89 ரூபாவாகவும் பதிவாகி உள்ளது. இலங்கையில் பணவீக்கம் சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், ரூபாவின் பெறுமதி பாரிய வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

இலங்கையின் பணப் பரிமாற்றத்தில் பவுண்ட், டொலருக்கு எதிராக ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்ட பாரிய வீழ்ச்சியாக இது உள்ளதாக பொருளியல் ஆய்வாளர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர். இதேவேளை இலங்கை மத்திய வங்கி நேற்று வெளியிட்ட நாணய மாற்று விகித தரவுகளின்படி, அமெரிக்க டொலர் கொள்வனவு வீதம் ரூ.249.96, மற்றும் விற்பனை விலை ரூ.229.33. ஆகவும் உள்ளது. இலங்கை ரூபாவின் பெறுமதி மிதப்பை மத்திய வங்கி நேற்று வங்கியாளர்களிடம் உறுதிப்படுத்தியுள்ளது.

Spread the love