உரோமிலுள்ள ஐக்கிய நாடுகள் உணவு மற்றும் விவசாயம் தொடர்பான நிறுவனத்தின் பிரதிநிதியான சின்ட் மெக்கெய்ன் இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று ஞாயிற்றுக்கிழமை இலங்கை வந்தடைந்தார்.
அவர் எதிர்வரும் 28 ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருப்பதுடன் கொழும்பில் அரசாங்க உயரதிகாரிகள் மற்றும் உணவுப் பொருட்கள் வழங்கும் அமைப்புக்களையும் சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார். அதேவேளை, ஐக்கிய நாடுகள் நிதியத்தின் மூலம் இலங்கையில் செயற்படுத்தப்படும் மனிதாபிமான உதவித்திட்ட பயனாளிகள் மற்றும் அதனை நடைமுறைப்படுத்தும் தரப்பினரையும் சந்தித்து அவர் பேச்சு வார்த்தை நடத்தவுள்ளார்.