இந்திய பிரதமர் நரேந்திர மோடி மார்ச் மாதமளவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. மார்ச் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள “வங்காள விரிகுடா பொருளாதர,தொழில்நுட்ப மற்றும் பல்துறை இணைப்பு முயற்சி” கூட்ட தொடரில் பங்குபற்றவே அவர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு அமைச்சினை மேற்கோள்காட்டி இந்த செய்தி வெளியாகியுள்ளது. பிரதமர் மோடியின் வருகை இந்தியா – இலங்கை உறவை மேம்படுத்தும் வகையில் அமையுமென நம்பப்படும் அதேவேளை பல முக்கிய விடயங்கள், முக்கிய சந்திப்புகள் இடம்பெறுமெனவும் நம்பப்படுகிறது.
இந்திய பிரதமரின் வருகைக்கு முன்னதாக விரைவில், இந்தியா வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கை வரவுள்ளார். இலங்கை, இந்தியா உறவை மேம்படுத்தும் விதத்தில் அந்த பயணம் அமையுமென எதிபார்க்கப்படுகிறது.
இலங்கை வெளியுறவு துறை அமைச்சர் ஜி.எல் பீரிஸ் இந்தியாவுக்கான சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து நாடு திரும்பியுள்ளார். நிதியமைச்சர் பசில் ராஜ்பக்ஷ அண்மையில் இந்தியா சென்று நாடு திரும்பியுள்ளார். மீண்டும் அவர் இந்தியா சென்று கடந்த கால சந்திப்புகளின் இரண்டாம் கட்ட நடவடிக்கைகள் தொடர்பில் சந்திப்புகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் அண்மைய பொருளாதர சிக்கல் நிலைகளை சீர் செய்ய இந்த சந்திப்புகள் கைகொடுக்குமென பெருமளவில் நம்பப்படுகிறது.