சீனாவுக்கும், இலங்கைக்கும் இடையில் மாதாந்தம் 2,000 மெற்றிக் டன் வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்வதற்கு கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் விவசாயத் திணைக்களத்தின் அலட்சியப் போக்கினால் ரத்தாகியுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில், 150 வாழை செய்கை விவசாயிகளின் விபரங்களை சீன அரசாங்கத்திடம் வழங்கி வாழைப்பழங்களை ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டிருந்தது.
புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, வாரத்திற்கு 500 மெற்றிக் டன் வாழைப்பழங்கள் வீதம், மாதத்திற்கு 2,000 மெற்றிக் டன் வாழைப்பழங்களை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய திட்டமிடப்பட்டது.
எவ்வாறாயினும், விவசாய அமைச்சு அதில் உரிய அவதானம் செலுத்தாமை காரணமாக வாழை ஏற்றுமதி உடன்படிக்கை ரத்தாகியுள்ளதாக அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் கலாநிதி எச்.எம்.சுபஹிங்கெந்த எமது செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.