இஸ்ரேலில் 11 வயதுச் சிறுவனுக்கு மூன்று வகையான கொரோனா தொற்று

இஸ்ரேலில் பாடசாலைச் சிறுவன் ஒருவனுக்கு,அல்பா, டெல்ற்றா மற்றும் ஒமிக்ரோன் என மூன்று வகையான கொரோனாத் தொற்றும் உறுதி செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இஸ்ரேலில் 11 வயது சிறுவன் அல்பா, டெல்ற்றா மற்றும் ஒமிக்ரோன் ஆகிய மூன்று நோய்த்தொற்றுகளும் உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வைத்தியர்களினால் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றார்.

இஸ்ரேலின் கெஃபர் சபாவில் வசிக்கும் அலைன் ஹெல்ஃப்கோட் எனும் 11 வயதுச் சிறுவனுக்கு,கொரோனா வைரஸ் தொற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு, முதலில் வைரஸ் தொற்று இருக்கின்றதா எனப் பரிசோதிக்கப்பட்டது.

இந்த நிலையில், முதல் நாள் முடிவில் அவருக்கு அல்பா டெல்ற்றா மற்றும் ஓமிக்ரோன் ஆகிய மூன்று வைரஸ் பிறழ்வுகளும் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இது குறித்து வைத்தியசாலை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவினால் பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு மூன்றாவது முறையாகப் பரிசோதனை நடத்தப்பட்டது தற்போதைய நிலையில், மேற்படி சிறுவன் நலமாக உள்ளதாகத் தெரிவித்தனர். முன்னதாக அவனது பாடசாலையில், அவருக்கு வைரஸ் தொற்றிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதுடன், வைரஸ் பரவும் பாதையை ஆய்வு செய்ததில், அவனது வகுப்புத் தோழர்களில் பத்துப் பேருக்கு கொரோனாத் தொற்றிருப்பது தெரியவந்தது. இந்த நிலையில், குறித்த சிறுவன் துணை மருத்துவர்களினால், தீவிரமாகக் கண்காணிக்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Spread the love