ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் வழக்கின் சாட்சிய விசாரணைகளை கொழும்பு நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம் நிறைவுக்கு கொண்டு வந்துள்ளது.
விசாரணைக்கான தீர்ப்பில் பூஜித் ஜயசுந்தரவை விடுவிப்பதா? இல்லையா? என்பது தொடர்பில் எதிர்வரும் மாதம் 18ஆம் திகதி தீர்மானிக்கப்படும என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கு மீதான சாட்சிய விசாரணை இன்று (20/01) இடம்பெற்றிருந்த நிலையில், அதனை நீதிமன்றம் விசாரணை செய்து நிறை செய்துள்ளது.
ஈஸ்டர் தாக்குதலின் போது, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தனது கடமைகளை அலட்சியப்படுத்தியதாகக் கூறி, அவருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.