உக்ரைனின் போரால் பாதிக்கப்பட்ட கிழக்குப் பிராந்தியங்களில் மோசமடைந்துவரும் தாக்குதல்களுக்கு மத்தியில், ரஸ்ய அதிபரினால் இது தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
உக்ரேனின் கிழக்கில் உள்ள,சுயாட்ச்சிப் பிரதேசங்களாக (சுயமாக) பிரகடனப்படுத்தப்பட்ட டொன்பொஸ் குடியரசுகளை (Donetsk (DPR) and Lugansk (LPR) ) இறையாண்மை கொண்ட நாடுகளாக மாஸ்கோ அங்கீகரிப்பதாக ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார்.
உக்ரேனின் கிழக்கில் உள்ள, சுயாட்ச்சிப் பிரதேசங்களாக (சுயமாக) பிரகடனப்படுத்தப்பட்ட இரு டொன்பொஸ் குடியரசுகளை இறையாண்மை கொண்ட நாடுகளாக மொஸ்கோ அங்கீகரிப்பதாக ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அறிவித்துள்ளார். இரு நாடுகளினது எல்லைக் கோடு முழுவதும் பதற்ற நிலை தொடர்ந்து அதிகரித்து வருகின்ற நிலையில் புடினின் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.
இந்த அங்கீகாரம், டொன்பொஸ் கிளர்ச்சியாளர்களுக்கும் உக்ரேன் அரச படைகளுக்கும் இடயே நடைபெற்றுவரும் சண்டைக்கு முற்றுப்புள்ளி வைக்க வடிவமைக்கப்பட்ட 2014 மின்ஸ்க் ஒப்பந்தங்களின் (Minsk agreements) தோல்வியின் நேரடி விளைவாகும் என்று அவர் கூறினார். “அவர்கள்(உக்ரேன் அரசு) சமாதான நடவடிக்கைகளில் ஆர்வம் காட்டவில்லை. போரைத் தொடரவே உக்ரேன் அரசு விரும்புகிறது என்று அவர் குற்றம் சாட்டினார்.
ரஸ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் அவர்களின் இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திட்ட பின்னர், டொன்ட்ஸ்க் (Donbass republics of Donetsk)மற்றும் லுகன்ஸ்க் (Lugansk),ஆகிய இரண்டு டொன்பொஸ் குடியரசுகளுக்கு அரசியல் ஒத்துழைப்பு மற்றும் இராணுவ ஆதரவை உறுதிப்படுத்தும் ஒப்பந்தங்களுக்கு ஆதரவாக ரஷ்ய நாடாளுமன்றம் அங்கீகாரம் அளித்தது.
இதே ரஸ்யாவின் இந்தச் செயலுக்கு மேற்குலகு தனது பலமான கண்டனத்தை தெரிவித்து வருவதுடன், உக்ரேன் நாட்டினது நிலப்பிரதேசத்தின் மீதான ஆட்சி அதிகாரத்துக்கு ஆதரவு தெரிவித்து, ரஸ்யா மீதும் அந்நாட்டின் முக்கிய பிரசைகள் மீதும் பொருளாதாரத் தடையை அறிவிக்க ஆரம்பித்துள்ளன.