உக்ரேன் மீது ரஸ்யா படையெடுப்பொன்றை மேற்கொள்ளுமாகின், தனது மக்களை அங்கிருந்து விமானம் மூலம் வெளியேற்ற இஸ்ரேல் திட்டமிடுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ரஸ்யா, உக்ரேன் மீது படையெடுப்பொன்றை மேற்கொள்ளும் என மேற்குலக பத்திரிகைகளும் அரசியல் தலைவர்களும் கூறிவரும் நிலையில், மேற்படி கிழக்கு ஐரோப்பிய நாட்டில், யுத்தத்தில் சிக்கிக்கொள்ளும் அபாயத்திலிருக்கும் ஆயிரக்கணக்கான யூதர்களை அங்கிருந்து விமானம் மூலம் வெளியேற்றும் முயற்சி தொடர்பாக விவாதிக்க இஸ்ரேல் அதிகாரிகள் கடந்த வார இறுதியில் சந்தித்துக்கொண்டனர் என இஸ்ரேலின் முன்னணிப் பத்திரிகைகளில் ஒன்றான ஹாட்ஸ் (Haaretz) தனது ஞாயிறு பதிப்பில் தெரிவித்துள்ளது.
உக்ரேனில் ஏறக்குறைய நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட யூதர்கள் வசிப்பதாக அதிகாரிகளால் மதிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், இவர்களில் இரண்டு லட்சம் பேரளவில், தாயகம் திரும்புவதற்கான இஸ்ரேலின் சட்டத்தின்படி (Middle Eastern nation’s Law of Return law) குடியுரிமைக்கு தகுதியுடையவர்களென கருதப்படுகிறது.
இரண்டாம் உலகப் போரின்போது, சோவியத் யூனியனில் தற்போதைய உக்ரேன் பகுதிகளில் வாழ்ந்த ஒரு மில்லியனுக்கும் அதிமுகமான யூதர்கள் நாசிப் படைகளாலும் அதன் உள்ளூர் ஆதரவாளர்களினாலும் கொல்லப்பட்டிருந்தனர். 1941 இல் இடம்பெற்ற யுத்தத்தில், இரு நாட்களில் மாத்திரம் முப்பத்து நான்காயிரம் யூதர்கள் கொல்லப்பட்டு, தற்போதைய கீவ் (Kiev) நகரத்திற்கு வெளியேயுள்ள பபி யார் (Babyn Yar) பள்ளத்தாக்கில் பெரும் புதைகுழிகளில் வீசப்பட்டிருந்தனர்.
அண்மையில், இஸ்ரேலிய அதிபர் ஐசக் ஹெர்ஸோ (Isaac Herzog) தற்போது ஐரோப்பாவில் மேலெழுந்துவரும் வரலாற்று மீள்திருத்தவாத கொள்கை தொடர்பாக, தனது அண்மைய உக்ரேன் விஜயத்திற்கு முன்னர் “நினைவுகள் வெறுமனே மறக்கப்படுவதில்லை – அவை அழிக்கப்படுகின்றன, அல்லது மீள எழுதப்படுகின்றன’ என்று விமர்சித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த ஆண்டின் ஆரம்பத்தில், இஸ்ரேலிய தூதரகம், நாஜிகளுடன் ஒத்துழைத்து, யூதர்களையும் போலந்து இனத்தேவர்களையும் படுகொலை செய்து இனச் சுத்திகரிபில் ஈடுபட்ட உக்ரேனிய தேசியவாதிகளின்(Organization of Ukrainian Nationalists – OUP) இரண்டாம் உலக போர்க்காலத் தலைவரான ஸ்டீபன் பண்டேரா (Stepan Bandera) நினைவாக நடத்தப்பட்ட வருடாந்திர தீப்பந்த ஊர்வலத்தில், உக்ரேனின் விடுதலைக்காக போராடிய மனிதராக ஸ்த்ரீபான் பண்டேரா சித்தரிக்கப்படுவதை அச்சத்துடன் சுட்டிக்காட்டியிருந்தது.
அண்மைய மாதங்களில், தனது அண்டை நாடான உக்ரேனைத் தாக்கும் நோக்குடன் ரஷ்ய-உக்ரேனிய எல்லையில் தனது துருப்புக்களை ரஸ்யா குவித்து வருகிறது என்ற செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் இந்த கூற்றுக்கள் வந்துள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை, “தொடர்ச்சியான ரஷ்ய இராணுவ நடவடிக்கை அச்சுறுத்தல் காரணமாக” கிய்வ்வில்( Kiev) பணிபுரியும் தனது இராஜதந்திரிகளின் குடும்பங்களை நாட்டை விட்டு வெளியேறுமாறு அமெரிக்க வெளியுறவுத்துறை உத்தரவிட்டது.
நிலைமை இவ்வாறு இருக்கையில், தாக்குதல் நடத்த திட்டமிடுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை மோஸ்கோ தொடர்ச்சியாக, பலமுறை மறுத்துள்ளது. அதன் செய்தித் தொடர்பாளர் டிமிற்ரி பெஸ்கோவ் Dmitry Peskov, “எமது நாட்டின் ஆயுதப் படைகளை அதன் சொந்தப் பகுதியில் நகர்த்துவது உள் விவகாரம் என்றும் வேறு யாருக்கும் இதயத்தை கவலை கொள்வதற்கு ஏதும் இல்லை” என்றும் கூறினார்.