போப்பை மத்தியஸ்தம் செய்ய அழைக்கிறார் ஸெலென்ஸ்கி!

நாளுக்கு நாள் போரில் எந்த தணிவுமின்றி உக்கிரமமாகவே நடைபெறுகிறது. இந்த நிலை மானிடத்தின் மாபெரும் அழிவையே மீண்டும் மீண்டும் ஏற்படுத்துகிறது. இதிலிருந்து மீளுவதற்று வழியாக உக்ரைன் அதிபர் போப் பிரான்ஸிசிடம் மத்தியஸ்தம் வகிக்குமாறு கோரிக்கை வைத்துள்ளார்.

உக்ரேன் – ரஷ்யா போரை நிறுத்த மத்தியஸ்தம் செய்யவேண்டும் என, போப் பிரான்சிஸிடம் உக்ரைன் அதிபர் வொலோடிமிர் ஸெலென்ஸ்கி தொலைபேசி வாயிலாக வலியுறுத்தியுள்ளார்.

இந்த உரையாடல் குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஸெலென்ஸ்கி, யுக்ரேனில் நிலவும் “கடினமான மனிதநேய பணிக்கான சூழல்” மற்றும்” பாதுகாப்புத்தேடி மக்கள் செல்லுகின்ற வழித்தடங்கள் யாவும் ரஷ்யப்படையினரால் தடுக்கப்படுவதுடன் அவை அழித்தொழிக்கவும் படுகின்றன” அது குறித்து போப் பிரான்சிஸிடம் தான் எடுத்துக்கூறியதாக தெரிவித்ததார் .

மேலும், “இருநாட்டு போரை நிறுத்துவது தொடர்பாகவும் அவரே மத்தியஸ்தம் செய்ய வேண்டும்” என்றும் அவர் போப் பிரான்சிஸை வலியுறுத்தியுள்ளார். வருங்காலத்தில் உக்ரேன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையிலான உயர்மட்ட அமைதி பேச்சுவார்த்தை நடைபெறும் இடமாக புனித ஜெருசலேம் இருக்கும் என, ஸெலென்ஸ்கி திங்கள்கிழமை தெரிவித்திருந்தார்.

Spread the love