உக்ரைனுக்கு மேலும் அதிக ஆயுதங்களை வழங்குவதற்கு நேட்டோ(NATO) தீர்மானித்துள்ளது.
அத்துடன், ரஷ்யாவின் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதல்களினால் சேதமடைந்த உக்ரைனின் எரிசக்தி கட்டமைப்புகளை மறுசீரமைப்பதற்கும் நேட்டோ உதவிகளை வழங்கவுள்ளது.
மேம்பட்ட வான் பாதுகாப்பு கட்டமைப்புகளை பெற்றுக்கொடுக்குமாறு நேட்டோவிடம் உக்ரைன் பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றது. இதனிடையே, குளிர்காலத்தை ஒரு யுத்த ஆயுதமாக ரஷ்யா பயன்படுத்துவதாக Bucharest மாநாட்டில் இராணுவ கூட்டணியின் பொதுச்செயலாளர் குற்றஞ்சாட்டியுள்ளார்.