உக்ரைனில் கிழக்குப் பகுதியில் உள்ள சாசிவ் யார் நகரில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பின் மீது ரஷ்ய படைகள் எறிகனை தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இத்தாக்குதல் சம்பவம்பவத்தில் 15 பேர் வரை கொல்லப்பட்டதுடன், குழந்தை ஒன்று உட்பட்ட 20 க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்கு சிக்குண்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இடிபாடுகளுக்குள் இருந்து சிலர் உயிருடன் மீட்கப்பட்டதாகவும் உக்ரேனிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். ரஷ்ய உராகன் எறிகனைகள் மூலமே இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது வேண்டுமென்றே நடத்தப்பட்ட தாக்குதல் என்று உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஸெலென்ஸ்கி குற்றம் சுமத்தியுள்ளார்.