நேட்டோ: 15 ஆயிரம் ரஷ்ய இராணுவத்தினர் பலி

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ள நிலையில், இதுவரையில் 15 ஆயிரம் ரஷ்ய படையினர் கொல்லப்பட்டிருக்கலாம் என நேட்டோ அமைப்பு மதிப்பிட்டுள்ளது.

உக்ரைன் அதிகாரிகளிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இத்தகவலை நேட்டோ இராணுவ அதிகாரி ஒருவர் வெளியிட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

உக்ரைன் மீது ரஷ்யா 28வது நாளாக தொடர் தாக்குதல் நடத்திவருகின்றது. உக்ரைனின் பல பகுதிகளை ரஷ்யா தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளது. தலைநகர் கீவை கைப்பற்ற ரஷ்யா உக்கிரமான தாக்குதலை நடத்தி வருகிறது.

ரஷ்ய படைகளது தாக்குதல் பலமானதாகவும் பாரிய அழிவுகளைத்தோற்றுவித்ததாகவும் காணப்பட்டபோதும் பதிலுக்கு உக்ரைன் இராணுவமும் தொடர்ந்து பதிலடி கொடுத்தவண்ணமே உள்ளது, அத்துடன் உக்ரைன் தனது கடும் எதிர்ப்பைக்காட்டாமலும் இல்லை, இதனால் இரு தரப்பிலும் சேதம் அதிக அளவில் ஏற்பட்டிருக்கும் எனக்கணக்கிடப்பட்டுள்ளது.

ரஷ்யாவின் எதிர்ப்புக்கு பதில் தாக்குதல் காட்டி வந்ததில் ரஷ்யா தரப்பில் இராணுவத்தினர் 7000 முதல் 15 ஆயிரம் வரையிலானவர்கள் உயிரிழந்திருக்கலாம் என நேட்டோ அமைப்பானது கணக்கிட்டுள்ளது. உக்ரைன் அதிகாரிகளிடம் இருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் இத்தகவலை நேட்டோ இராணுவ அதிகாரி ஒருவர் கூறி உள்ளார்.

இதேவேளை, அப்பட்டமான கபட நாடகப் பொய்களுடன் ரஷ்யாவுக்கு அரசியல் ஆதரவை சீனா வழங்குகிறது என்றும் நேட்டோ பொதுச்செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க் குற்றம் சுமத்தியுள்ளார். இது இவ்வாறிருக்க ரஷ்யாவின் அணு ஆயுதம் மற்றும் இரசாயன ஆயுத அச்சுறுத்தல்களுக்கு எதிராக உக்ரைனுக்கு கூடுதல் ஆதரவை தாம்  வழங்குவதற்கு நேட்டோ நட்பு நாடுகள் ஒப்புக்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Spread the love