உலக கிண்ணத்தில் இலங்கை அணி அதிர்ச்சி தோல்வி

19 வயதுக்குட்பட்ட உலக கிண்ண கிரிக்கெட் தொடரில் இலங்கை கிரிக்கெட் அணி ஆப்கானிஸ்தான் அணியிடம் தோல்வியடைந்துள்ளது. மோசமான முன்வரிசை துடுப்பாட்டம் இலங்கை அணிக்கு இந்த போட்டியில் தோல்வியினை ஏற்படுத்தியுள்ளது.

50 ஓவர்கள் போட்டியில் மொத்தமாகவே 264 ஓட்டங்களே பெறப்பட்டன. முதலில் துடுப்பாடிய ஆப்கானிஸ்தான் அணி 47.1 ஓவர்களில் 134 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை அணி 130 ஓட்டங்களை மட்டுமே 46 ஓவர்களில் பெற முடிந்தது. 43 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்கள் என்ற நிலையில் காணப்பட்ட இலங்கை அணியினை தலைவர் துனித் வெல்லாகல போராடி மீட்ட போதும் வெற்றி பெற முடியவில்லை.
இந்த தொடரில் இலங்கை அணி முன்னோக்கி செல்லுமென்ற எதிர்பார்ப்புகள் அதிகமாக காணாப்படவில்லை. மஹேல ஜெயவர்த்தன அணியோடு இணைந்ததும், இலங்கை அணி முதல் சுற்றில் தோல்விகளின்றி முதலிடத்தை பெற்றதும் இலங்கை அணி மீது மிகப் பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியது.

ஆப்கானிஸ்தான் அணியுடன் காலிறுதி போட்டி என்ற காரணத்தினால் அரை இறுதி வரை இலகுவாக செல்ல முடியும் என்ற எதிர்பார்ப்பும் உருவாகியிருந்த நிலையில் இலங்கை அணி தோல்வியடைந்துள்ளது.

இங்கிலாந்து, ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் அரை இறுதிப் போட்டிகளுக்கு தெரிவாகியுள்ளன. பாகிஸ்தான் – அவுஸ்திரேலியா, இந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் அரை இரண்டு காலிறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

Spread the love