உலக மக்கள் தொகை நவம்பரில் 800 கோடியாகும்-ஐ.நா தகவல்

உலக மக்கள் தொகை இவ்வாண்டு நவம்பர் மாதம் 15 ஆம் திகதியில் 800 கோடியை எட்டும் என ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது. ஐ.நா. உலக மக்கள் தொகை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது தற்போது உலக மக்கள் தொகை 794 கோடியாக உள்ளது. இது வரும் நவம்பர் மாதம் 15 ஆம் திகதியில் 800 கோடியை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நாளில் துல்லியமாக எட்டும் என உறுதியாக கூறமுடியாது.

வரும் 2030 இல் உலக மக்கள் தொகை 970 கோடியை எட்டும். இது 2080 இல் 1040 கோடியாக உயரும். 2100 ஆம் ஆண்டு வரை மக்கள் தொகையில் மாற்றம் இருக்காது. உலகளவில் 2050 இம் ஆண்டு வரை மக்கள் தொகை அதிகரிப்பில் எட்டு நாடுகள் 50 சதவீத பங்கை வழங்கும். இதன்படி இந்தியா, கொங்கோ, எகிப்து, எத்தியோப்பியா, நைஜீரியா, பிலிப்பைன்ஸ், தான்சானியா ஆகிய நாடுகள் மக்கள் தொகை அதிகரிப்பில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2050 இல் இந்தியா, சீனா ஆகிய நாடுகளை அடுத்து அமெரிக்கா தொடர்ந்து மூன்றாவது இடத்தில் இருக்கும். நான்காவது இடத்தில் நைஜீரியா இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த இடங்களில் இந்தோனேஷியா, பிரேசில், கொங்கோ, எத்தியோப்பியா, வங்கதேசம் ஆகியவை இடம் பெறும் என தெரிகிறது. இந்தாண்டு மக்கள் தொகையில் 9 மற்றும் 10 ஆவது இடத்தில் உள்ள ரஷ்யா, மெக்சிகோ நாடுகள் 2050 இல் பின்னுக்கு தள்ளப்பட்டு விடும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Spread the love