உக்ரைன் ரஷ்யா யுத்தமானது உக்ரைனின் இயற்கை மற்றும் பொருளாதாரம் யாவற்றையும் அழித்தொழித்தது, உக்ரைனது நாட்டை புத்தாக்கம் பெற வைக்க உலகவங்கியானது உக்ரைனுக்குக்கடனுதவி செய்ய முன்வந்துள்ளது. உக்ரேன் – ரஷ்யா ஆகிய சோவியத் யூனியனின் நாடுகளுக்கிடையே இடம்பெற்று வரும் இப்போரானது 14 நாட்களைக் கடந்தும் முடிவின்றி நீடித்து வருகின்றது. இம் மோதலின் காரணமாக இரு நாடுகளுக்குள்ளும் மிக அதிக அளவிலான உயிர் இழப்புக்களும், மிக பெறுமதியான பொருட்சேதங்களும் ஏற்பட்டுள்ளன. அத்துடன் உக்ரேனின் முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் பலம் பொருந்திய தாக்குதல்கள் நடத்தி கைப்பற்றியுள்ளதால் அங்கு வசித்து வந்த லட்சக்கணக்கான மக்கள் நிர்க்கதியான நிலையில் அகதிகளாக அண்டை நாடுகளில் தஞ்சம் கோரியுள்ளனர். இவ்வேளை இப் போரை நிறுத்தும்படி அமெரிக்கா, பிரித்தானியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளும் தொடர்ந்து வற்புறுத்தி அழுத்தம் கொடுத்து வருகின்றன. இந்நிலையில்தான், உலக வங்கியானது உக்ரேனுக்கு உதவ முன்வந்து அதிரடி அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிவிப்பில் உக்ரேனில் பொருளாதார நிலையை மேம்படுத்தி அவசர நிலையை மீட்பதற்கான 723 மில்லியன் டொலர்கள் உக்ரைனுக்கு கடனுதவியாக வழங்க தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2022-03-12