பொதுவாகவே கிளி நன்றாகப் பேசும் என்பது நம் அனைவருக்குமே தெரியும். நாய், பூனை என ஏராளமான செல்லப்பிராணிகள் இருந்தாலும் அவற்றில் இல்லாத ஒரு தன்மை கிளிகளுக்கு உண்டு. அதுதான் அவற்றின் பேசும் குணம். கிளிகளைப் பொறுத்தவரை அவை மனிதர்களோடு மிகவும் நெருக்கமாக வாழும் பிராணிதான். இங்கேயும் அப்படித்தான்…ஒருவர் தன் வீட்டில் பாசமாக ஒரு கிளியை வளர்த்து வந்தார்.
அந்தக் கிளியும் அவரோடு செல்லக் குழந்தை போல் பழகிவிட்டது. தன்னை பழம் கொடுத்தும், கடலை உள்ளிட்ட நொறுக்கி தீனிகளையும் போட்டு வளர்க்கும் தன் எஜமானார் ஆ வென்று வாயைத் திறந்துவைக்க, கிளியோ அவர் வாய்க்குள் தன் தலையை முழுவதுமாகப் போட்டு க்யூட்டாக விளையாடுகிறது.